நெருப்புமூட்டு-தல் neruppumūṭṭudal, 5.செ.கு.வி.(v.i.)
1. தீப்பற்ற வைத்தல்; to kindle fire. நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்தான்.
2. கலகம் உண்டாக்குதல் (உ.வ.);; to arouse a disturbance, to instigate a quarrel.
வீட்டில் நெருப்பு மூட்டி விட்டான். இனி அமைதியைக் காணமுடியாது.
[நெருப்பு + மூட்டு, நெருப்பை யுண்டாக்கி உணவு சமைத்தலும் உண்டு. நெருப்பை உண்டாக்கிப் பொருள்களை அழித்தலும் உண்டு. அழித்தல் பொருளில் கலகம் உண்டாக்குதல் வந்தது. அஃது அமைதியை அழித்தல் என்பதாம்.]