நெருப்புப்படு-தல்

நெருப்புப்படு-தல் neruppuppaḍudal,    20செ.கு.வி.(v.i.)

   1. நெருப்பால் அழிதல்; to be consumed by fire.

நெருப்புப்பட்டு துணி ஒட்டையாகி விட்டது.

   2. கடுங்கோடையால் வருந்துதல்; to be consumed with drought.

   3. தெய்வத்தண்டனை முதலியவற்றால் அழிதல் (வின்.);; to be destroyed, as by divine retribution.

கண்ணகியின் கடுஞ்சினத்தால் நெருப்புப் பட்டு மதுரை அழிந்தது.

   4. முறையற்ற அரசனின் ஆட்சியால் துன்புறுதல் (வின்.);; to suffer oppression, injustice, as from a wicked ruler.

   5. விலை முதலியன மிகுதியாதல்; to be abnormal as prices.

     [நெருப்பு + படு-தல். நெருப்புப்படுவதால் ஏற்படும் அழிவைப் போல், துன்பத்தைப்போல், கடுங்கோடையும், முறையற்ற அரசனும், விலை ஏற்றமும், மக்களை வாட்டும் தன்மையான வாதலால் நெருப்புப் படுதல் என்ற சொல்லுக்கு மேற்கண்ட பொருள்கள் அமைந்தன.]