நெருப்புக்கோழி

நெருப்புக்கோழி neruppukāḻi, பெ. (n.)

   1. நீண்ட காலும், கழுத்தும் சிறிய தலையும் பறக்கப் பயன்படாத பெரிய சிறகுகளும் கொண்ட தீத்தணலை விழுங்கும் கோழிவகை; ostrich, as eating embers.

   2. நெருப்புப் போன்று சிவந்த தொண்டையையுடைய வான்கோழி;(வின்.);; Turkey-cock, as having fire-red throat.

     [நெருப்பு + கோழி]

     [P]

   நெருப்புக்கோழி : இது பறவைகளில் பெரியது: நிமிர்ந்திருக்கும்போது ஆறு அடி முதல் எட்டு அடி உயரமிருக்கும். அரேபியாவிலும், தென்னாப்பிரிக் காவிலும் இதனைக் காணலாம், பறக்க முடியாது;   காலில் இரண்டே விரல்கள் உண்டு. முட்டை இட்டு அடை காக்கும்;   ஆண்டுக்கு ஒரு முறையே முட்டையிடும்;முட்டை பெரியது. இதன் கழுத்திலும் தொடைகளிலும் இறகுகளில்லாத படியால் அப்பாகங்கள் நெருப்புப் போல் சிவப்பாயிருக்கும். இஃது உண்ணும் உணவைச் செரிப்பிக்க வேண்டிக் கற்களையும் ஆணிகளையும் விழுங்கும் தன்மையது.