நெருப்புக்கொளுத்து1 neruppukkoḷuddudal, 5.செ.கு.வி.(v.i.)
1. தீமூட்டுதல் (வின்.); அடுப்பில் தீ மூட்டிதல்; to kindle of fire, as in an oven.
2. கடுவெயி லெரித்தல் (உ.வ.);; to be hot, scorching, as the sun.
3. கடுமையாதல் (வின்.);; to be very severe, as showing anger in reproof.
4. தீமை (வின்.);; to do injustice, to tyrannise.
5. கலகமூட்டுதல் (உ.வ.);; to foment or instigate a quarrel.
[நெருப்பு + கொளுத்து + தல்]
நெருப்புக்கொளுத்து2 neruppukkoḷuddudal, 5செ.குன்றாவி.(v.t.)
தீக்கொளுத்துதல். (உ.வ.);; to set fire to.
[நெருப்பு + கொளுத்து-தல்.]