நென்னல்

நென்னல் neṉṉal, பெ. (n.)

வி.எ. (adv.);

   முன்னாள்; yesterday.

     “அன்னந் துணையோ டாடக் கண்டு நென்னல் நோக்கி நின்றா ரொருவர் நென்னல் நோக்கி நின்றா ரவர்தம் பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர்” (சிலப். 7, பாட்_45);.

     “அம்மவாழிதோழி நென்னல் ஒங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவன்” (ஐங்குறு. 113);.

     [நெருநல் → நென்னல்.]

ஒ.நோ. திருநின்றவூர் → தின்னனுர் – வழக்குத்திரிபு.