நெடுமுதல் குறுகும் மொழிகள்

யான் நீ தான் யாம் நாம் தாம் என்பன உருபேற்குமிடத்து நெடுமுதல்குறுகி என் நின் தன் எம் நம் தம் என்று நிற்பனவாம்.எ-டு : யான் + கு > என் + அ + கு = எனக்குநீ + கு > நின் + அ + கு = நினக்கு (தொ. எ. 161 நச்.)யான் யாம் நாம் நீ நீர் தான் தாம் என்பன நெடுமுதல் குறுகுவன. இவைமுறையே நெடுமுதல் குறுகி, என் எம் நம் நின் நும் தன் தம் என்றாகிவேற்றுமையுருபு ஏற்கும். என்னை என்னால் எனக்கு என்னின் எனது என்கண் எனஆறுருபுகளோடும் பிறவற்றையும் ஒட்டிக் காண்க. (நான்காவதும் ஆறாவதும்வருவழி, நெடுமுதல் குறுகிநின்றவை அகரச்சாரியை பெறும் என்க.) (நன்.247)