தம் நம் நும் – என்ற சாரியை இடைச்சொற்கள் இயல்பாக அமைந்தவை. அவைதாம் நாம் நீஇர் என்பவற்றின் திரிபு அல்ல.எல்லாம் எல்லீர் எல்லார் – என்பன உருபேற்குமிடத்து இடையே வரும் நம்நும் தம் என்பன, நாம் நீஇர் தாம் என்ற பெயர்கள் உருபேற்குமிடத்து நம்நும் தம் என நெடுமுதல் குறுகி அகரச்சாரியை பெறுமாறு போல, அகரச்சாரியைபெற்று, வருமொழியாக வரும் உருபொடு புணரும்.(ஈண்டு உருபுகள் குவ்வும் அதுவும் என்க.)வருமாறு : எல்லாம் + கு > எல்லாம் + நம் + அ + கு + உம் = எல்லாநமக்கும்; எல்லீர் +கு > எல்லீர் + நும் + அ + கு + உம் = எல்லீர் நுமக்கும்; எல்லார் +கு > எல்லார் + தம் + அ + கு + உம் = எல்லார் தமக்கும் என்று,இறுதியில் உம்முச்சாரியை பெற்றுப் புணரும்.எனவே, நம் நும் தம் என்ற சாரியை இடைச்சொற்கள் வேறு; நாம் நீஇர்தாம் என்பன முதல் குறுகி வரும் நம் நும் தம் என்பன வேறு என்பது. (தொ.எ. 161 நச். உரை)