நெடுங்கணக்கில் ஆய்தத்தின் இடம்பற்றி வீரசோழியத்திற் கண்டது

ஆய்தம் உயிரையும் மெய்யையும் சார்ந்து இடையே வருதலின், தமிழ்நெடுங்கணக்கில் உயிர் பன்னிரண்டையும் அடுத்து மெய் பதினெட்டன் முன்னர்உயிர்க்கும் மெய்க்கும் நடுவே வைக்கப் பட்டது. (ஆய்தம் உயிர்போல அலகுபெற்றும் மெய் போல அலகு பெறாமலும் செய்யுளுள் வழங்கும் இரு நிலைமையும் உடைமையால், அஃது உயிரும் மெய்யுமாகிய அவற்றிடையே வைக்கப்பட்டதுஎனலாம்) (வீ. சோ. சந்திப். 1)