சார்பெழுத்துக்களுள் ஆய்தம் அகர ஆகாரங்கள் போல அங்காந்து கூறும்முயற்சியால் பிறத்தலானும், உயிர் ஏறாது ஓசைவிகாரமாய் நிற்பதுஒன்றேனும் எழுத்தியல் தழா ஓசை போலக் கொள்ளினும் கொள்ளற்க, எழுத்தேயாம்என்று ஒற்றின்பாற்படுத்தற்குப் ‘புள்ளி’ எனப் பெயர் பெறுதலா னும்,உயிரும் ஒற்றுமாகிய இரண்டிற்குமிடையே வைக்கப் பட்டது. (இ. வி. 8உரை)