நெடுங்கணக்கின் அமைப்பு முறை

எழுத்துக்களுக்கு எல்லாம் அகரம் முதலாதலின் முதற்கண்வைக்கப்பட்டது. வீடுபேற்றிற்குரிய ஆண்மகனை உணர்த்தும் சிறப்பான் னகரம்பின்வைத்தார். குற்றெழுத்துக்களை முன் னாகக் கூறி அவற்றிற்கு இனம்ஒத்த நெட்டெழுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரைகூறியே இரண்டு மாத்திரை கூற வேண்டுதலின்.அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்தலின்வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வாதேனும்சுட்டுப்பொருட்டாய் நிற்கின்ற இனம் கருதி. எகரம் அதன் பின் வைத்தார்,அகர இகரங்களொடு பிறப்பு ஒப்புமை பற்றி. ஐகார ஒளகாரங்களின் இனமானகுற்றெழுத்து இலவேனும், பிறப்பு ஒப்புமை பற்றி ஏகார ஓகாரங்களின்பின்னர் ஐகார ஒளகாரங்கள் வைத்தார். ஒகரம் நொ என மெய்யோடுகூடிநின்றல்லது தானாக ஓரெழுத் தொருமொழி ஆகாத சிறப்பின்மை நோக்கிஐகாரத்தின் பின்வைத்தார். இன்னும் அஆ, உஊ, ஒஓ ஒள – இவை தம்முள் வடிவுஒக்கும்; இ ஈ ஐ வடிவு ஒவ்வா.இனி, ககாரஙகாரமும், சகார ஞகாரமும், டகார ணகாரமும், தகார நகாரமும்,பகார மகாரமும் தமக்குப் பிறப்பும் செய்கையும் ஒத்தலின், வல்லொற்றிடையேமெல்லொற்றுக் கலந்து வைத்தார். முதல்நாவும் முதல்அண்ணமும், இடைநா வும்இடையண்ணமும், நுனிநாவும் நுனிஅண்ணமும், இதழ் இயைதலும் ஆகிப்பிறக்கின்ற இடத்தின் முறைமை நோக்கி அவ்வெழுத்துக்களைக் க ச ட த ப, ங ஞண ந ம என இம்முறையே வைத்தார். பிறப்புஒப்புமையானும், னகரம் றகரமாகத்திரிதலானும் றகாரமும் னகாரமும் சேரவைத்தார். இவை தமிழ் எழுத்து என்றுஅறிவித்தற்குப் பின்னர் வைத்தார்.இனி இடையெழுத்துக்களில் யகரம் முன் வைத்தார், அஃது உயிர் போலமிடற்றுப் பிறந்த வளி அண்ணம் கண்ணுற்ற அடையப் பிறத்தலின். ரகரம்அதனொடு பிறப்பு ஒவ்வாதே னும் செய்கை ஒத்தலின் அதன்பின் வைத்தார்.லகாரமும் வகாரமும் தம்முள் பிறப்பும் செய்கையும் ஒவ்வாவேனும், கால்வலிது – சொல் வலிது என்றாற் போலத் தம்மில் சேர்ந்து வரும் சொற்கள்பெரும்பான்மை என்பது பற்றி, லகாரமும் வகாரமும் சேர வைத்தார். ழகாரமும்ளகாரமும் இயைபில வேனும், ‘இடையெழுத் தென்ப யரல வழள’ என்றால் சந்தஇன்பத்திற்கு இயைபுடைமை பற்றிச் சேரவைத்தார் போலும். (தொ. எ. 1 நச்.உரை)(எழுத்துக்களின் முறை வைப்பு (2) – காண்க.)