ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற ஏழும் உயிர்நெடிலாம். இவை 18 மெய்யுடன் கூட18 x 7 = 126 உயிர்மெய் நெடிலாம். இவை தனித்தனி இரண்டுமாத்திரைபெறும். அளபெடைக்கண் ஐகார நெடிலுக்கு இகரமும், ஒளகார நெடிலுக்குஉகரமும் இனக்குறிலாகக் கொள்ளப்படும்.எ-டு : விலைஇ, கௌஉ.நெடில், நெடுமை, நெட்டெழுத்து என்பன ஒருபொருளன. (நன். 65)