நெடில் உயிர்த்தொடர்க்குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் சில வருமொழியொடுபுணருமிடத்து வேற்றுமையில் இனஒற்று (ட், ற்) மிகாமையும், அல்வழியில்மிகுதலும் உளவாம்.எ-டு :‘காடகம் இறந்தார்க்கே’ (யா.வி. மேற்.)‘நாடு கிழவோனே’ ( பொருந. 248‘கறை மிடறணியலும் அணிந்தன்று’ (புறநா. கடவுள்.)இவை வேற்றுமைக்கண் மிகாவாயின.(மிகுதலாவது டற ஒற்று இரட்டுதலான் வரு மிகுதி.)காட்டரண், குருட்டுக் கோழி, முருட்டுப் புலையன்; களிற்றி யானை,வெளிற்றுப் பனை, எயிற்றுப்பல்; இவை அல்வழிக் கண் மிக்கன.வெருக்கு க் கண், எரு த் துக்கால் (செவி தலை புறம்) – எனப் பிற மெய்கள் மிக்கன. (நன்.182 மயிலை.)