நெடில்தொடர்க் குற்றியலுகரம்

மொழியின் ஈற்றெழுத்து உகரம் ஏறிய வல்லொற்று ஆறனுள் (கு சு டு து புறு) ஒன்றாக, அயலெழுத்துத் தனிநெடிலாக இருப்பின், அவ்வீற்று உகரம்நெடில்தொடர்க் குற்றிய லுகரம் எனப்படும். இதனைத் தொல். ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரம் என்னும்.எ-டு : நாகு, காசு, காடு, காது, வெளபு, யாறு (நன். 94)