நெடிலோடு உயிர்த்தொடர் இரட்டல்

டகர றகர மெய்களை ஊர்ந்து வரும் குற்றியலுகரம் நிற்கும்நெடில்தொடர்க்குற்றியலுகரச் சொல் முன்னும் உயிர்த்தொடர்க்குற்றியலுகரச் சொல் முன்னும் நாற்கணமும் வரு மிடத்து,வேற்றுமைப் புணர்ச்சிக்கண் டகர றகர ஒற்றுக்கள் பெரும்பான்மையும்இரட்டும்.எ-டு : ஆடு + கால், மயிர், வலிமை, அடி = ஆட்டுக்கால்,ஆட்டுமயிர், ஆட்டு வலிமை, ஆட்டடிபாறு + கால், மயிர், வலிமை, அடி = பாற்றுக்கால், பாற்றுமயிர்,பாற்றுவலிமை, பாற்றடிமுருடு + கால், நிறம், வலிமை, அடி = முருட்டுக்கால்,முருட்டுநிறம், முருட்டுவலிமை, முருட்டடி.முயிறு + கால், நிறம், வலிமை, அடி = முயிற்றுக்கால்,முயிற்றுநிறம், முயிற்றுவலிமை, முயிற்றடி.சிறுபான்மை வேற்றுமைக்கண் இரட்டாமையும், சிறு பான்மை அல்வழிக்கண்இரட்டுதலும், சிறுபான்மை இருவழி யிலும் பிற ஒற்று இரட்டுதலும்கொள்க.எ-டு : நாடு கிழவோன், ‘கறைமிட றணியலும் அணிந் தன்று’ (புறநா.கடவுள்.) – வேற்றுமையில் இரட்டா வாயின.காட்டரண், களிற்றியானை – அல்வழியில் இரட்டின.வெருகு + கண் = வெருக்குக் கண் – வேற்றுமைஎருது + மாடு = எருத்துமாடு – அல்வழி பிற ஒற்றுக்கள்இரட்டின.