ண் ன் ம் ல் ள் என்ற ஐந்து ஒற்றுக்களும் தனிநெடிலை அடுத்துநிலைமொழி இறுதியில் வர, வருமொழிக்கண் முதலில் நகரம் வரின், நிலைமொழிஈற்று ஒற்றுக் கெடும். வருமொழிக்கண் முதலில் தகரம் வரின், ல் ள்ஒற்றுக்கள் கெடும்.எ-டு : கோண் + நிமிர்ந்தது = கோணிமிர்ந்தது; தான் + நல்லன் =தானல்லன்; தாம் + நல்லர் = தாநல்லர்; பால் + நன்று = பானன்று; கோள் +நன்று = கோணன்று; பால் + தீது = பாறீது; கோள் + தீது = கோடீது.நெடிலுக்குக் கூறிய விதி குறிலிணை, குறில் நெடில் இவற்றுக்கும்ஒக்கும்.எ-டு : விரல் + தீது = விரறீது, குறள் + நன்று =குறணன்றுவரால் + தீது = வராறீது, பரண் + நன்று = பரணன்று(தொ. எ. 160 நச்.)