க் ச் த் ப் என்பன நான்கு மெய்களும் தம்மொடு தாமே மயங்கும்.ர் ழ் என்பன இரண்டு மெய்களும் தம்மொடு பிறவே மயங்கும்.ஏனைய பன்னிரண்டு மெய்களும் தம்மொடு தாமும் தம் மொடு பிறவும்மயங்கும்.ட் ற் ல் ள் என்பனவற்றின் முன் க் ச் ப் என்பன மயங்கும்.அவற்றுள், ல் ள் – என்பனவற்றின்முன் ய் வ் – என்பனவும்மயங்கும்.ங் ஞ் ண் ந் ம் ன் – என்ற மெல்லினப்புள்ளிகளின் முன் க் ச் ட் த்ப் ற் – என்ற வல்லினப்புள்ளிகள் முறையே மயங்கும்.அவற்றுள், ண் ன் என்பனவற்றின் முன் க் ச் ஞ் ப் ம் ய் வ் என்றமெய்களும் மயங்கும்.ஞ் ந் ம் வ் என்ற மெய்களின் முன் யகரமும் மயங்கும்; அவற்றுள்மகரத்தின் முன் வகரமும் மயங்கும்.ய் ர் ழ் என்பனவற்றின்முன் க் ச் த் ந் ப் ம் ய் வ் என்பனவும்ஙகரமும் மயங்கும் – என்று மெய்ம்மயக்கம் கூறப்படுகிறது.இம்மெய்மயக்கத்தை நச். ஒருமொழிக்கண்ணது என்பர்; ஏனையோர்இருமொழிக்கண்ணது என்பர். (தொ.எ. 22-30 நச்).