நூற்றொன்று….. நூற்றொன்பது:புணர்நிலை

நூறு நிலைமொழியாக, வருமொழிக்கண் ஒன்றுமுதல் ஒன்பது ஈறாகியஎண்ணுப்பெயர் வரின், இடையே றகரஒற்று மிக நிலைமொழி ‘நூற்று’ என்றுநிற்ப, ஒன்று முதலிய உயிர் முதல் மொழிகள் வருமொழியாகுமிடத்துக்குற்றியலுகரம் மெய்யீறு போல உயிரேற இடங்கொடுக்கும். கொடுப்பவே, நூறு +ஒன்று = நூற்றொன்று எனப்புணரும். நூற்று + மூன்று, நூற்று + நான்குஇவை இயல்பாகப் புணரும்.நூற்பாவுள் ‘ஈறு சினை ஒழிய’ என்பது இறுதிச்சினையாகிய ‘று’ என்றஎழுத்துக் கெடாது நிற்ப என்று பொருள்படும்.‘ஒழியா’ என்பது பாலசுந்தரனார் பாடம். அதன் நுட்பத் தினையும் உணர்க.(எ. ஆ. பக். 176, தொ. எ. 472 நச்.)