நும் ‘நீஇர்’ ஆதல்

நீஇர் என்பதனைத் தொல். ‘நும்மின் திரிபெயர்’ என்றார். நும் என்பதுபெயர் வேர்ச்சொல்; நீஇர் என்பது அதன் முதல் வேற்றுமை ஏற்ற வடிவம்என்று தொல். கூறியுள்ளார்.நும் என்பது உகரம் கெட்டு ஈகாரம் பெற்று நீ என ஆகும்; நும் என்பதன்ஈற்று மகரம் ரகர ஒற்றாக, ‘நீர்’ என வரும்; அதுவே இடையே இகரம் வர‘நீஇர்’ என்றாகும்.ஆகவே, நும் என்பது நீம் நீர் நீஇர் என முறையே திரிந்துமுதல்வேற்றுமை வடிவம் பெறும் என்பது. (தொ. எ. 326 நச்.)பிற்காலத்தார் ‘நீஇர்’ என்பதன் இகரத்தை அளபெடை யாகக் கொண்டு நீக்கி‘நீர்’ என்பதே முன்னிலைப்பன்மைப் பெயர் எனக் கொள்ளலாயினர். சிலர்நீஇர் என்பதனை நீயிர், நீவிர் எனத் திரித்து வழங்கலாயினர்.