நீர் தாம் யாம் நாம் என்ற இடப்பெயர்களின் திரிபுகளாகிய நும் தம்எம் நம் என்பனவற்று முன் ஞகர நகர முதன்மொழி வருமிடத்தே, நிலைமொழிஈற்று மகரம் முறையே ஞகர நகரங்களாகத் திரியும். (நீர் என்பதன்திரிபாகிய உம் என்பதற்கும் இஃது ஒக்கும்). இது வேற்றுமைப்புணர்ச்சி.எ-டு : நும், தம், எம், நம் + ஞாண் = நுஞ்ஞாண், தஞ்ஞாண்,எஞ்ஞாண், நஞ்ஞாண்; நும், தம், எம், நம், + நாண் = நுந்நாண், தந்நாண்,எந்நாண், நந்நாண்உம் + ஞாண், நாண் = உஞ்ஞாண், உந்நாண்மகர முதல்மொழி வரின் நும்+மணி = நும்மணி என இயல் பாகப் புணரும்.பிறவற்றுக்கும் கொள்க. (நன். 221)