நும் என்ற பெயர்ப் புணர்ச்சி

தொல்காப்பியனார் நும் என்பதனைப் பெயராகக் கொண்டு அஃதுஅல்வழிப்புணர்ச்சிக்கண் நீஇர் எனத்திரிந்து வரு மொழியொடு புணரும்எனவும், வேற்றுமைப்புணர்ச்சிக்கண் ஈறுகெட்டு வருமொழி வன்கணத்துக்கேற்றமெலி மிக்கும், மென்கணம் வரின் அம் மெல்லெழுத்தே மிக்கும் புணரும்எனவும், ஐ உருபு ஏற்குமிடத்து ஈற்று மெய் (ம்) இரட்டியும்,நான்கனுருபும் ஆறனுருபும் ஏற்குமிடத்து அகரச்சாரியை பெற்றும்,நான்கனுருபிற்கு வருமொழி வல்லொற்று மிக்கும். ‘அது’ உருபுஏற்குமிடத்து அவ்வுருபின் அகரம் கெட்டும், ‘கண்’ உருபு ஏற்குமிடத்துமகரம் கெட்டு வருமொழிக்கேற்ப ஙகர மெல்லொற்று மிக்கும் புணரும் எனவும்கூறியுள்ளார்.வருமாறு : நீஇர் கடியீர், நீஇர் நல்லீர் -அல்வழிநுங்கை, நும்செவி, நுந்தலை (நும்புறம் : இயல்பு);நுஞ்ஞாண், நுந்நன்மை, நும்மாட்சி – வேற்றுமைப்பொருட்புணர்ச்சிநும் + ஐ = நும்மை; நும் + அ + க் + கு = நுமக்கு; நும் + அ +(அ)து = நுமது; நும் + கண் = நுங்கண் – உருபு புணர்ச்சி (தொ. எ. 114,115, 187, 325, 326 நச்.)