‘நும்’ அந்நிலை திரியாமை

நும் என்ற முன்னிலைப் பன்மைச்சொல் நான்கன் உருபொடும் ஆறன்உருபொடும் புணருங்கால், தன் – என் – நின் – முதலிய நெடு முதல்குறுகும் சொற்களைப் போலவே, தானும் குற்றொற்று இரட்டாமையும்,ஈறாகுபுள்ளி அகரமொடு நிலையலும் உடையது.வருமாறு : நும் + கு > நும் + அ + கு = நுமக்கு;நும் + அது > நும் + அ + அது > நும் + அ + து = நுமது;நும் + அ > நும் + அ + அ > நும் + அ + வ் + அ = நுமவ (வகரம் உடம்படுமெய்) (தொ. எ. 162நச்.)