நுந்தை ‘நு’ குற்றியலுகரம் அன்மை

‘ கு ற்றியலுகரம் முறைப்பெயர்மருங்கின், ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் ’ எனத் தொல். குற்றியலுகரம் மொழிக்கு முதலாம்என்றாரெனின்,‘நுந்தை உகரம் குறுகி மொழிமுதற்கண்வந்த தெனின்உயிர்மெய் யாமனைத்தும் – சந்திக்குஉயிர்முதலா வந்தணையும் மெய்ப்புணர்ச்சி யின்றிமயல்அணையும் என்றதனை மாற்று’என்பதால் விதியும் விலக்கும் அறிந்துகொள்க. (நன். 105 மயிலை.உரை)