நகரம் மேற்பல் முதலிடத்து நாநுனி பரந்து ஒற்றப் பிறத்த லானும்,உகரம் இரண்டு இதழும் குவித்துக் கூறப் பிறப்பது ஆதலானும், இரண்டு நகரஒலிகளுக்கு இடையே நன்கு இதழ் குவித்துக் கூறும் முயற்சி நிலையாமையான்,உகரம் அரை மாத்திரை அளவாக ஒலிக்கும் என்பது உய்த்துணரத்தக்கது.நுந்தை உகரம் குறுகி மொழிமுதற்கண் வந்தது என்றால், சந்தியில்,மொழிமுதற்கண் வரும் உயிர்மெய்கள் எல்லாம் உண்மையான புணர்ச்சிநிலைமாறும் என்று கொண்டு, மயிலைநாதர் நுந்தை குற்றியலுகரம் அன்றுஎன்றார்.இவன் + நுந்தை = இவனுந்தை; னு: ஒருமாத்திரை யுடையது. (எ. ஆ. பக்.68, 69)நுந்தை என்பதிலுள்ள உகரம் குற்றியலுகரமாகவும் முற்றியலு கரமாகவும்ஒலிக்கப்பட்டதை நோக்கி இச்சூத்திரம் கூறினார். (எ. கு. பக். 76)நுந்தாய் என்பது நுந்தையின் விளியாகவும், நும் தாய் என்று பொருள்படவும் என இருதிறம்பட வருதலின் முற்றியலு கரமாம். (எ.கு. பக். 77)(தொ. எ. 68 நச்.)