நீ என்ற சொல் புணருமாறு

நீ என்னும் முன்னிலை ஒருமைப் பொதுப்பெயர் எழுவாயாய் வரும்போதுநாற்கணத்தொடும் இயல்பாகவும், உருபேற்கும் போது நின் எனத் திரிந்தும்,இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வருமொழி வன்கணம் வரின் னகரம் றகரமாகத்திரிந்தும் வருமொழியொடு புணரும்.எ-டு : நீ குறியை, ஞான்றாய், வலியை, அரியை என நாற் கணத்தோடும்அல்வழியில் இயல்பாகப் புணர்ந்த வாறு.நின்கை, ஞாற்சி, வலிமை, அழகு என நீ ‘நின்’ எனத் திரிந்துவருமொழி நாற்கணத்தும் வேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பாகமுடிந்தவாறு.உயிர் வருமொழி முதற்கண் வருமிடத்தே, ‘நின்’ என்பதன் னகரம்(தனிக்குறில்முன் ஒற்று ஆதலின்) இரட்டியது. (இவ்விரட்டுதலும் இயல்புபுணர்ச்சியே என்ப)நின் + புறங்காப்ப = நிற்புறங்காப்ப – என இரண்டன் தொகைக்கண்னகரம் றகரமாகத் திரிந்து புணர்ந்த வாறு. (தொ. எ. 250, 253, 157நச்.)