நீர்ப்பெயற்று

பெரும்‌ பாணாற்றுப்‌ படையில்‌ நீர்ப்பெயற்று என்னும்‌ ஓர்‌ ஊர்ப்பெயர்‌ குறிப்பிடப்‌ பெற்றுள்ளது. நீர்ப்பெயற்று என்பது கடல்நீர்‌ உட்பெய்தலைக்‌ கொண்டதாகிய நிலம்‌ எனப்‌ பொருள்படும்‌. அதாவது உப்பங்கழியையுடைய நிலப்பகுதியாகும்‌. மாமல்லபுரத்திற்கு இரண்டுகல்‌ தெற்கே கடல்நீர்‌ நிலத்துள்‌ நுழைந்து, மாமல்லபுரத்திற்குக்‌ தென்மேற்கில்‌ அரைக்கல்‌ தொலைவுவரை பரவியுள்ளது. மாமல்லபுரத்திற்கு மேற்கில்‌ தொடங்க வடக்கே மூன்றுகல்‌ தொலைவில்‌ உள்ள சாளுவன்‌ குப்பம்‌ வரைவில்‌ மணல்‌ வெளி பரவியுள்ளது. இங்ஙனம்‌ மாமல்லபுரத்திற்கு வடக்‌கிலும்‌ தெற்கிலும்‌ உள்ள மணல்‌ வெளியை ‘ஊடுருவிக்‌ கொண்டே இன்றைய பக்கிங்‌ ஹாம்‌ கால்வாய்‌ செல்‌கிறது. இம்மணல்‌ வெளிகள்‌ பண்டைக்‌ காலத்தில்‌ கடல்நீரைப்‌ பெற்றிருந்தமையால் தான்‌ இன்று மணல்‌ வெளி களாய்‌ உள்ளன. எனவே சங்க காலத்தில்‌ கடல்நீரைப்‌ பெய்தலையுடைய நிலப்‌பரப்பாக இப்பகுதி இருந்திருத்தல்‌ வேண்டும்‌ என்பது தெளிவு. ஊரார்‌ இப்பகுதியை இன்று கழிவெளி என்கின்றனர்‌. இத்தகைய பகுதியின் ‌எல்லையில்‌ துறைமுகமும்‌ பட்டினமும்‌ இருந்தன என்று பெரும்பாணன்‌ கூறியுள்ளான்‌. ஆகவே அவன்‌ குறித்தவை பிற்‌கால மாமல்லபுரம்‌ இருந்த பகுதியேயாகும்‌ என்பர்‌, மதுராந்தகம்‌ வட்டத்தின்‌ தென்பகுதியில்‌ “நீர்ப்போ்‌” என்று உள்ள சிற்றூரே நீர்ப்‌ பெயற்றாகலாம்‌ என்றும்‌ கூறுவர்‌. மாமல்லபுரத்தையடுத்த கழிவெளிப்‌ பகுதியே நீர்ப்பெயற்று என்னும்‌ பெயரையுடைய ஊராக இருக்கவேண்டும்‌ என்ற கருத்தே பொருத்தமானதாகத்‌ தோன்றுகிறது. நீர்ப்பெயற்று என்னும்‌ ஊரின்‌ எல்லையில்‌ துறைமுகமும்‌ அமைந்திருந்தது என்று பெரும்பரணாற்றுப்‌ படை கூறுவதால்‌ இத்துறைமுகப்‌ பட்டினமாகவும்‌ ௧ருத இடமளிக்கும்‌ பிற்கால மாமல்லபுரப்பகுதியில்‌ அமைந்த கழிவெளியே நீர்ப்பெயற்று என்னும்‌ ஊர்‌ இருந்த இடம்‌ என்று கொள்ளுவதே பொருந்தும்‌. நீர்ப்பெயற்று என்பதை நீர்ப்‌ பெயர்த்து எனத்தவறாகக்‌ கொண்டு நீர்ப்பெயரையுடைய நகரம்‌ என்று கூறுவது பொருந்‌ துவதாகத்‌ தெரியவில்லை.
“வண்டல்‌ ஆயமொடு உண்துறைத்தலைஇ,
புனல்‌ ஆடுமகளிர்‌ இட்ட பொலங்குழை
இரைதேர்‌ மணிச்சிரல்‌ இரை செத்து எறிந்தென,
புள்‌ஆர்‌ பெண்ணைப்‌ புலம்பு மடற்‌ செல்லாது,
கேள்வி அந்தணர்‌ அருங்கடன்‌ இறுத்த
வேள்விக்‌ தூணத்து அசைஇ, யவனர்‌
ஓதிம விளக்கின்‌ உயர்‌ மிசைக்கொண்ட,
வைகுறு மீனின்‌ பைபயத்‌ தோன்றும்‌
நீர்ப்பெயற்று எல்லைப்போக” (பத்துப்‌…பெரும்‌.311 319)