செய்யுள் முதற்கண் மங்கலமாக அமைக்கத் தகும் கூவிளங் கனிச்சீர்.இதற்குரிய நாள் சதயம். “இதன் பயன் பாட்டுடைத் தலைவன் சீர் சிறப்புஎய்துதல்” என்றார் மாமூலர். இக்கணம் நிலைபேற்றினைத் தருவது என்றுஇந்திரகாளியர் பலன் கூறினார். (இ. வி. பாட். 40)