நீரொடு கூடிய பால்

நிலைமொழிப் புள்ளியீற்றொடு வருமொழி முதல் உயிர் கூடி(உயிர்மெய்யாக) நிற்றல் நீரொடு கூடிய பால்போல் நிற்றல் என்றுஒற்றுமைநயம் கூறினார். உயிர்மெய் மெய்யின் மாத்திரை தோன்றாதுஉயிரெழுத்தின் மாத்திரையே தன் மாத்திரையாக நிற்கும் நயம்ஒற்றுமைநயமாம். (மெய் முன்னரும் உயிர் பின்னருமாக உச்சரிக்கப்படுவதுஓசைபற்றி வரும் வேற்றுமை நயம்). (இ. வி. எழுத். 64 உரை)