பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப்பருவம் பத்தனுள் ஒன்று; பாட்டுடைத்தலைவியாம் சிறுமி தோழியர் புடைசூழக் குதூகலம் கொண்டு வாசனை கமழும்நறுநீரில் திளைத்துக் குளித்தலைப் பாடுவது. இதற்கு ஒப்பாக,கழற்சிக்காய் ஆடும் கழங்குப் பருவத்தைக் கொள்வாரும் உளர். சந்தவிருத்தமாகப் பத்துப்பாடல் இடம்பெறும் (இ. வி. பாட். 47).