செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுளுள் தொடை நயம் நோக்கிக்குற்றெழுத்து இனமொத்த நெடிலாக விகாரப் படுவது நீட்டல் விகாரமாம்.எ-டு : ‘போத்தறார் புல்லறிவி னார்’ (நாலடி. 351)பொத்து என்பதே சொல். மேலடியுள் ‘தீத்தொழிலே’ என்ற முதற்சீரை நோக்கிஎதுகைவேண்டிப் ‘பொத்தறார்’ எனற் பாலது ஒகரம் நீண்டு ‘போத்தறார்’ என்றுநீட்டல் விகாரம் ஆயிற்று, எதுகைத் தொடைக்கு முதற்சீர்களின் முதல்எழுத்து அளவொத்து நிற்றல் வேண்டுதலின். (நன். 155 சங்.)