நீடவருதல் ‘நீட்டும்வழி நீட்டல்’அன்மை

நீட வருதலாவது செய்யுட்கண் அகர இகர உகரச் சுட்டுக்கள் நீண்டுவருமொழியோடு ‘ஆயிடை’ ‘ஈவயினான’ ‘ஊவயி னான’ என்றாற் போலப்புணர்வதாகும். ‘நீட்டும்வழி நீட்டல்’ விகாரம், (நிழல் – நீழல்என்றாற்போல) ஒருமொழிக் கண் நிகழ்வதாம் செய்யுள்விகாரம். ஆதலின் இவைதம்முள் வேறுபாடுடையன. (தொ. எ. 208 நச். உரை)