மெய் அல்லது உயிரீறாக நிற்கும் நிலைமொழி மூவினமெய் வருமிடத்துஏற்கும் முடிவு ஆறு வகைகளாம். அவை இயல்பு, மிகுதல், உறழ்ச்சி,திரிதல், கெடுதல், நிலைமாறுதல் என்பன வாம். இக்கருத்துஇலக்கணக்கொத்தினின்றும் கொள்ளப் பட்டது. (இ.கொ. 113, 114)எ-டு : நிலா + முற்றம் = நிலாமுற்றம்; வாழை + பழம் =வாழைப்பழம்; கிளி + குறிது = கிளிகுறிது, கிளிக் குறிது; பொன் + குடம்= பொற்குடம்; மரம் + வேர் = மரவேர்; நாளி + கேரம் = நாரிகேளம் எனமுறையே காண்க. (சுவாமி. எழுத். 28)