நிலா என்ற பெயர் புணருமாறு

நிலா என்பது குற்றெழுத்தை அடுத்த ஆகாரஈற்றுப் பெயர். இது வருமொழிவன்கணம் வரின் எழுத்துப்பேறளபெடையும் வல்லெழுத்தும் பெற்றும், ஏனையகணங்கள் வந்துழி எழுத்துப் பேறளபெடை மாத்திரம் பெற்றும் புணரும்.(ஈண்டு அகரம் எழுத்துப்பேறளபெடையாம்.)எ-டு : நிலாஅக்கதிர், நிலாஅமுற்றம் (தொ. எ. 226 நச்.)நிலா என்ற சொல் அத்துச்சாரியை பெற்று, நிலாஅத்துக் கொண்டான்,நிலாஅத்து ஞான்றான் என வரும். (228 நச்.)செய்யுட்கண் நிலா என்பது நில என்றாகி உகரச்சாரியை பெற்று நிலவுஎன்றாகி வருமொழியொடு புணர்தலுமுண்டு.எ-டு : நிலவுக்கதிர் (234 நச்.)