நிறுத்த சொல்

புணர்ச்சிக்குரிய இரண்டு சொற்களில் முதலில் கொள்ளப் படும் சொல்நிறுத்தசொல் எனப்படும் நிலைமொழியாம். இது குறித்து வரு கிளவியாகியவருமொழியுடன் கூடும்போது இயல்பாகவும் திரிபுற்றும் புணரும்.அந்நிறுத்த சொல் பெரும் பான்மையும் பெயராகவோ வினையாகவோ இருக்கும்;சிறுபான்மை இடைச்சொல்லோ உரிச்சொல்லோ ஆதல் கூடும். (தொ. எ. 107நச்.)