ஒரு நேரிசை வெண்பாவில் முதலீரடியும் இதழியைந்தும் குவிந்தும் வரும்எழுத்துக்களான் இயலாத நிரோட்டியமாய் அமைய, கடையிரண்டடியும்அவ்வெழுத்துக்களைப் பெற்று வரும் ஓட்டியமாய் அமைவது.எ-டு : கற்றைச் சடையார் கயிலைக் கிரியெடுத்தான்செற்றைக் கரங்கள் சிரங்களீரைந் – தற்றழியஏஏவும் எவ்வுளுறு ஏமமுறு பூமாதுகோவே முழுதுமுறு கோ.சிவபெருமானது கயிலையை எடுத்த இராவணனுடைய வலியற்ற இருபதுகரங்களும்பத்துத்தலைகளும் அற்று விழுமாறு அம்பு தொடுத்த திருஎவ்வுள் என்றதிருப்பதியில் எழுந்தருளி, பூமாது புணரும் திருமாலே பரம்பொருள் – என்றகருத்தமைந்த இப்பாடற்கண், முதலீரடிகளும் உ ஊ ஒ ஓ ஒள ப் ம் வ் -என்னும் எட்டெழுத்துக்களும் இன்றியமைந்த நிரோட்டியமாக,ஈற்றடியிரண்டும் அவ்வெழுத்துக்களைக் கொண்ட ஓட்டியமாக அமைந்துள்ளமைகாணப்படும். (மா. அ. பாடல். 776).