நிரோட்டகம்

மிறைக்கவிகளுள் ஒன்று. உதடுகளின் தொடர்பில்லா மலேயே உச்சரிக்கக்கூடிய எழுத்துக்களாலான செய்யுள். உ ஊ ஒ ஓ ஒள ப் ம் வ் என்னும்எழுத்துக்கள் இதழ்களின் துணைகொண்டே உச்சரிக்கப்படுவன. இவ்வெட்டும்நீங்க லான பிற எழுத்துக்களால் அமையும் செய்யுள் இம்மிறைக்கவியின்பாற்படும்.எ-டு : சீலத்தான் ஞானத்தான் தேற்றத்தான் சென்றகன்றகாலத்தான் ஆராத காதலான் – ஞாலத்தார்இச்சிக்கச் சாலச் செறிந்தடி யேற்கினிதாங்கச்சிக்கச் சாலைக் கனி.“காஞ்சிமா நகரில் திருக்கச்சாலை எனும் திருத்தலத்தில் உள்ள கனிபோன்ற சிவபெருமான் ஒழுக்கத்தாலும் ஞானத் தாலும் மனத் தெளிவாலும்வரையறை இன்றியே பலகால மாக வழிபடுவதாலும், நீங்காத காதலாலும், மிகஉயரிய பெரியோர்களால் நினைக்கப்பட வேண்டியவனாயினும், தாழ்ந்தவனாகியஅடியேனுக்கும் இரங்கி என் மனத்தில் வந்து பொருந்தி இன்பம்தருகின்றான்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உதடுகளின் தொடர்புஎவ்வாற்றானும் அமை யாத எழுத்துக்களே வந்துள்ளமையின் இது நிரோட்டகம்ஆயிற்று. ‘எய்தற் கரிய தியைந்தக்கால்’ என்ற குறளும் (498) அது.(தண்டி. 98 உரை)