நாழிமுன் உரி புணருமாறு

நாழி என்னும் முகத்தல் அளவுப்பெயர் முன்னர், உரி என்னும் முகத்தலளவுப்பெயர் வருமொழியாய் வருங்காலத்து, அந் நாழி என்னும் சொல்லின்இறுதியில் நின்ற இகரம் தானேறிய மெய்யொடும் கெடும். அவ்விடத்து டகரம்ஒற்றாய் வரும். (இரண்டு உரி கொண்டது ஒரு நாழி. நாழியும் உரியும் எனஉம்மைத்தொகையாய் இஃது அல்வழிப் புணர்ச்சியாம்).வருமாறு : நாழி + உரி > நா + உரி > நா + ட் + உரி = நாடுரி. (தொ. எ. 240 நச், நன். 174)