‘நாள்முன் வரூஉம் வன்முதல்தொழில்நிலைக்கிளவி’ புணருமாறு

இகர ஐகார மகர ஈற்று விண்மீன் பெயர்கள் நிலைமொழி களாக நிற்ப,வருமொழிகளாக வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வினைச்சொற்கள் வரும்வழி,இடையே ஆன் சாரியை வரும்.எ-டு : பரணி + கொண்டான் > பரணி + ஆன் + கொண்டான் = பரணியாற் கொண்டான்; சித்திரை +கொண்டான் > சித்திரை + ஆன் + கொண்டான் = சித்திரையாற் கொண்டான்; மகம் +கொண்டான் > மகம் + அத்து + ஆன் + கொண்டான் = மகத்தாற் கொண்டான்; இவைவேற்றுமைப் புணர்ச்சி; ஏழாவதன் பொருள் விரித்துரைக்கப்படும். (தொ. எ.124, 247, 286, 331 நச்.)