நாலூர் என்று சுட்டப்படும் ஊர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. நாலூர் என்பது ஊர்ப்பெயராகவும், மயானம் கோயிற் பெயராகவும் அமைந்து விளங்கியதை அறிகிறோம். சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது. நறையார் பொழில் புடைசூழ் நாலூர் மயானம் என்று சுட்டும் தன்மையில் இதுவும் ஒரு செழிப்பு மிக்க ஊராக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. நான்கு சிறு குடியிருப்புப் பகுதிகள் இருந்தமை காரணமாக இப்பெயர் பெற்றதோ என்ற எண்ணம் நாலூர் என்பதை நோக்க எழுகின்றது.