சங்க இலக்கியங்களில் “*நாலூர்க்கோசர் நன்மொழி” (குறுந் 15) என்பதுபோல் கோசரைக் குறிக்கும் இடங்களிளெல்லரம் நாலுரர் என்ற அடையுடனே குறிக்கப்பட்டுள்ளது. நான்கு ஊரிலுள்ள. கோசர் என்றோ, நாலூர் என்ற ஊரிலுள்ள கோசர் என்றோ எண்ண இடமளிக்கிறது. நாலை என்று சங்க இலக்கியத்தில் இடம் பெறும் இடம் நாலூர் என்ற ஊரே, மருவி நாலை என வழங்குகிறது என்றும் கூறுகின்றனர். இவ்வூர் பாண்டிய நாட்டில் அருப்புக் கோட்டைக்கு. அருகில். உள்ளது. நாலைக்கிழவன் நாகன் பாண்டியன் ஒருவனுடைய படைத் தலைவன். இவனை வடநெடுந்தத்தனார் பாடியுள்ளார். (புறம் 19)