நாலடி நாற்பது

இஃது அவிநயர் யாப்பிற்கு அங்கமாய் அமைந்த நூலாகும். இதன்நூற்பாக்களில் நான்கு வெண்பாக்களும், ஒரு கட்டளைக் கலித்துறையும்மேற்கோள்களாகக் கிடைத்துள் ளன. அதனால், இவ்விருவகை யாப்பாலும் இந்நூல்அமைந்தமை தெரிகிறது. இது நாற்பது நூற்பாக்களைக் கொண்டிருந்தது போலும்.கட்டளைக் கலித்துறை இந் நூலைச் சேர்ந்தது அன்று என்பாரும் உளர்.இந்நூலின் மேற்கோள் நூற்பாக்கள் அசைக்கு உறுப்பாவன பற்றியும்அடிமயக்கம் பற்றியும் குறிப்பிடும். (யா. வி. பக்.30,31, 129)