நாரையூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற ஊர். நாரை வழிபட்ட தலமாதலின் நாரையூர் எனப் பெயர் பெற்றது என்ற கருத்து இப்பெயர்த் தொடர்பாக அமைகிறது. ” பொன்னி வடகரைசேர் நாரையூரில் என நம்பியாண்டார் நம்பி தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிப்பிடுகின் றார் (1).
தேம்புனல் சூழ் திகழ் மாமடு விற்றிரு நாரையூர்மேய
பூம்புனல் சேர் புரிபுன் சடையான்’
என ஞானசம்பந்தர் இவ்வூர் பற்றிய எண்ணம் தருகின்றார். எனவே நீர் வளமுடைய ஊர் என்பது வெளிப்பட, நாரைகளின் மிகுதி காரணமாக இவ்வூர்ப்பெயர் அமைந்திருக்கலாம்.