முதலீரடிகள் நான்கு பொருள்களுக்குச் சிலேடையாகவும், பின் இரண்டுஅடிகள் மடக்காகவும் அமையும் மடக்கு வகை.எ-டு : கொம்பரஞ்சொன் மின்னார் குயம்பொன்னி யன்பருளமம்பரந்தோ யுந்தென் னரங்கமே – தும்பியுரைத்தா னுரைத்தா னுயர்திரை நீர் தட்டீனரைத்தா னரைத்தா னகம்.‘தும்பி உரைத்தான் நுரை தான் உயர் திரை நீர் தட்டு ஈனரைத் தான்அரைத்தான் அகம்’- கசேந்திரனால் அழைக் கப்பட்டவனும், நுரையை உயர்த்தும்அலைகளை உடைய கடலை அணைகட்டிக் கடந்து நீசராம் அரக்கரை அழித்த வனும்ஆகிய திருமாலது இருப்பிடம் அழகிய அரங்க நகராகும்;கொம்பர் அம்பரம் தோயும் அரங்கம் – கொடிகள் வான் அளாவியிருக்கும்அரங்கம்.மின்னார் குயம் அம்பரம் தோயும் அரங்கம்-மகளிர் தனம் மேலாடையைநீங்காதிருக்கும் அரங்கம்.பொன்னி அம்பரம் தோயும் அரங்கம் – காவிரி கடலைப் பொருந்தக்கிழக்குத் திக்கில் ஓடும் அரங்கம்.அன்பர் உளம் அம்பரம் தோயும் அரங்கம்-அடியார்உள்ளம் மேம்பட்ட பரம்ஆகிய இறைவனைத் தியானம் செய்யும் அரங்கம்.இவ்வாறு ‘அம்பரம் தோயும்’ என்ற சொற்றொடரைச் சிலேடைப் பொருளால்கொம்பர், மகளிர் தனம், காவிரி, அடியவர் உள்ளம் என்ற நான்கும் கொண்டுமுடிந்தமை நாற்பொருள் சிலேடை. இச்சிலேடையை அடுத்து, ஈற்றடிகளில்மடக்கு முதற் சீர்களில் இணைய அமைந்ததால், இப்பாடல் நாற்பொருள் சிலேடைஇணைமடக்கு ஆயிற்று. (மா. அ. பாடல் 757)