நான்காரைச் சக்கரம்

மிறைக்கவிகளுள் ஒன்று; சக்கரம் போன்ற அமைப்புடையது. இச்சக்கரம்நான்கு ஆர்க்கால்களையுடையது. வட்டை ‘சூட்டு’ எனப்படும்; சக்கரத்தின்இடையே விட்டமாகச் செல்வது ஆர்க்கால். (ஆர்க்கால்களுக்கு அடியில் உள்ள,குடத்தின் வளைவான பாகமாகிய, குறடு நான்காரைச் சக்கரத் தில் இல்லை; ஆறுஎட்டு ஆரைச்சக்கரங்களில் உண்டு.)பாட்டு :‘மேரு சாபமு மேவுமேமேவு மேயுண வாலமேமேல வாமவ னாயமேமேய னானடி சாருமே.’மேருவை வில்லாகக் கொள்பவனும், விடத்தை உணவாக விரும்புபவனும்,உயர்ந்த உருவினவாகிய கூளிக் கூட்டத்தை மேவியவனும் ஆகிய அத்தகையானுடையதிருவடிகளைச் சார்வீராக – என்பது இதன்பொருள்.இது, ‘மே’ எனும் எழுத்து நடுவே நின்று, ஆர்மேல் ஒவ்வோர் எழுத்துநின்று, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்து நின்று, நடுவிலிருந்து கீழ்ஆரின் வழியே இறங்கி இடமாகச் சென்று அடுத்த ஆரின் வழியாக நடுவையடைந்துமுதலடி முடியவும்; மீண்டும் நடுவிலிருந்து அந்த ஆரின் வழியாகவேஇடமாகத் திரும்பி வலமாகச் சூட்டின் வழியே அடுத்த ஆரில் இறங்கவேஇரண்டாம் அடி முடியவும்; மீண்டும் நடுவிலிருநது ஆர் வழியே மேலேறிச்சூட்டில் வலமாகச் சென்று அடுத்த ஆர்ப்பகுதியில் இடமாகச் செல்ல,மூன்றாமடி முடியவும்; மீண்டும் நடுவிலிருந்து ஆரின் வழியே வலமாகச்சென்று சூட்டின்கீழேயிறங்கி அடுத்த ஆர்ப்பகுதியில் மேலேறவே,நான்காமடியும் முடியவும் இப்பாடல் நிகழுமாறு. (தண்டி. 96 உரை)