நான்கடி ஒருசொல் மடக்கு (யமகயமகம்)

ஒரு சொல்லே நான்கடியும் முழுதுமாக மடக்கி வருவது. இஃது இயமாவியமகம் எனவும் வழங்கப்பெறும்.எ-டு :உமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரன்.உமா தரன் – உமையைத் தரித்தவன்; ஆதரன் – ஆதரிக்கின்ற வன்; மா தரன் -மானைத் தரித்தவன்; மா தரன் – அழகை யுடையவன், திருவைத் தரித்தவன்; மாதரன் – மாமரத்தடியில் தங்கியிருப்பவன், இடபத்தைச் செலுத்துபவன்; மாதரன் – யானைத்தோலைப் போர்த்தியவன்; ஆதரன் – விருப்ப முடையவன்; மாதுஅரன் – பெருமை மிக்க சிவன்.