மிறைக்கவியாம் சித்திரகவிகளுள் ஒன்று. தண்டியலங்காரம் (உரை) இரட்டைநாக பந்தத்தையே சுட்டுகிறது. (மற்றொன்று அட்ட நாக பந்தம்) இரண்டுபாம்புகள் தம்முள் இணைவனவாகப் படம்வரைந்து, ஒரு நேரிசை வெண்பாவும் ஓர்இன்னிசை வெண்பாவும் எழுதி, சந்திகளில் நின்ற எழுத்தே மற்றையிடங்களினும் உறுப்பாய் நிற்கப் பாடுவது. மேற்சுற்றுச் சந்திநான்கினும் நான்கெழுத்தும், கீழ்ச்சுற்றுச் சந்தி நான்கினும்நான்கெழுத்தும் என்றிவ்வாறு சித்திரத்தில் அடைப்பது.வருமாறு: நேரிசைவெண்பா.அருளின் திருவுருவே யம்பலத்தா யும்பர்தெருளின் மருவாச்சீர்ச் சீரே – பொருவிலாஒன்றே யுமையா ளுடனே யுறுதிதருகுன்றே தெருள அருள்.(அறத்தின் அழகிய மேனியாய்! திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்!ஒப்பற்ற தேவர்கள் அறிவிற்கும் எட்டாத அழகிய புகழ்ச்சி யுடையாய்!ஒப்பற்ற ஏகரூபத்தினையுடையாய்! உமையொடு கூடி எமக்குச் சிவபதம்அளிக்கும் மலைபோல் வாய்! யாங்கள் தெளிவு பெற மெய்யறிவினைஅருள்வாயாக.)இன்னிசைவெண்பா.மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சுபெருகொளியான் றேயபெருஞ் சோதி – திருநிலாவானம் சுருங்க மிகுசுடரே சித்தமயரு மளவை ஒழி.(நின்னை அடைந்தவருள்ளத்தின்கண் நிலைபெற்ற ஒளியாக உள்ளாய்! உண்டநஞ்சினால் விளைந்த பெருகிய நிறம் நிறைந்து பொருந்திய(திருநீலகண்டத்தினையுடைய) பெருஞ் சோதி வடிவனே! அழகிய மதியையுடைய வானம்சிறுகு மாறு பெருகிய ஒளித்திரு மேனியாய்! எனது நெஞ்சம் நின்திருவடிகளை மறக்கும் அளவினைப் போக்கியருள்வாயாக.)முன்னர் ‘இரட்டை நாக பந்தம்’ என்ற தலைப்பினைக் காண்க. (தண்டி.98)