நவநந்தினி விருத்தம்

முதல் மூன்றும் காய்ச்சீர், இறுதி தேமாச்சீர் என அமைந்த அடிநான்கான் ஆவது. (வி. பா. ஏழாம்படலம் 14)நேர் அசையில் தொடங்கும் காய்ச்சீர்:தேசுற்ற மாடமுறை சீப்பவரு காலோன்வாசப்பு னற்கலவை வார்புணரி கொண்கன்வீசப்பு லார்த்தியிட விண்படரும் வெய்யோன்ஆசுற்ற தானவர மர்ந்தினிதி ருந்தான். (கந்தபு. III நகர்புகு. 48)நிரை அசையில் தொடங்கும் காய்ச்சீர்:மிடற்றகுவர் சூழ்வரலும் வீரனெழுந் தன்னோர்முடிச்சிகையொ ராயிரமு மொய்ம்பினொடு கையால்பிடித்தவுணர் மன்னனமர் பேரவைநி லத்தின்அடித்தனனொ டிப்பிலவ ராவிமுழு துண்டான். (கந்தபு. III அவைபுகு. 156)