காரைக்காலுக்கு அருகில் உள்ள தலம். திருநள்ளாறு எனச் சுட்டப்படுகிறது திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற தலம் இது.
மந்த முழவந்தரு விழா வொலியம் வேதச்
சந்தம் விரவிப்பொழில் முழங்கிய நள்ளாறே – 169-10
நண்ணிய குளிர்புனல் புகுது நள்ளாறர் – திருஞான-345-5
நறவ நாறும் பொழில் திருநள்ளாறு திருநா – 182-5
நறை விரியு நள்ளாறு சுந்- 68-7
என போ ற பாடலடிகளில் நள்ளாற்றின் சிறப்பு தெரியவருகின்றது. பெரிய புராணமும் செங்கை மான் மழுவேந்தும் சினவிடையார் அமர்ந்தருளும் திருநள்ளாறு (34-454-4) இறைச்சிறப்பு உரைக்கும் தன்மை இதன் நிலையைத் தருகின்றது. நள்ளாறு என்ற பெயரினைக் கொண்டு தனை ஆறால் பெயர் பெற்ற ஊர் என உணர இயலுகின்றது. திரு. நாச்சிமுத்து நள் என்பது நடுப்பகுதி எனக் கொண்டு, ஒப்பு நோக்கால் ஆற்றுப் பெயர்கள் அமையும் நிலையில் நள்ளாறு என்பதையும் சுட்டுகின்றார் தனை உறுதிப்படுத்தும் கருத்தாக, இது அரசிலாற்றுக்கும் வாஞ்ச நதிக்கும் நடுவில் இருப்பதால் நள்ளாறு அழைக்கப்படுவதாற்று என்ற எண்ணமும் அமைகிறது. நளன் பூசித்த காரணம் என்ற எண்ணமும் இப்பெயர் தொடர்பாக அமைகிறது. எனினும் இது ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று. நளன் வழிபட்ட செய்தியென,
வளம் கெழுவு தீபமொடு தூப மலர் தூவி
நளன் கெழுவி நாளும் வழிபாடு செய் நள்ளாளாறே
என ஞானசம்பந்தர் பாடலடிகளைத் தருகின்றனர். எனினும் இக்கதை முன்னரே இவ்வூர்ப் பெயர் குறித்து மக்களிடையே காணப்பட்டது என்ற கருத்தையே நாம் கொள்ளல் பொருத்தமானது.