நளினீ விருத்தம்

இஃது அடிக்குப் பதினைந்து எழுத்துக்கள் கொண்ட வடமொழிவிருத்தம்.இதன் அமைப்பு இறுதி இலகுவான கணங்கள் ஐந்து வருதல். மாத்திரைக்கணக்கில் அடிக்கு இருபது மாத்திரை. பின் வரும் எடுத்துக்காட்டுக்களில்முதலாவது இருபது மாத்திரை அளவில் அமைகிறது; இரண்டாவதில் மாத்திரைமிக்குளது.1) 4 மாத்திரைச்சீர் ஐந்து புணர்ந்த அடிநான்காய் வருவது. நான்குமாத்திரை மாச்சீர் அவை.எ-டு : அம்மா ணகருக் கரச னரசர்(க்) கரசன்செம்மாண் டனிக்கோ லுலகே ழினுஞ்செ லநின்றானிம்மாண் கதைக்கோ ரிறையா யவிரா மனென்னுமொய்ம்மாண் கழலோற் றருநல் லறமூர்த் தியன்னான். (கம்பரா.168)2) 4 கூவிளஞ்சீர்கள் நான்கு மாத்திரை அளவினவாக, இறுதிச்சீர்ஆறுமாத்திரைத் தேமாங்காய்ச்சீராக அமைந்த அடி நான்கான் வருவது.எ-டு : ஓர்பக னீர்நிறை பூந்தட மொன்றுறு பூக்கொய்வான்சீர்தரு திண்கரி சேறலு மங்கொரு வன்மீன (ம்)நீரிடை நின்றுவெ குண்டடி பற்றிநி மிர்ந்தீர்ப்பக்காரொலி காட்டிய கன்கரை யீர்த்தது காய்வேழம். (காஞ்சிப்புண்ணிய.10) (வி.பா.8 ஆம் படலம்)