நல்லூர்ப்பெருமணம்

தற்போது ஆச்சாள் புரம் எனச் சுட்டப்படும் ஊர் இது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. சிதம்பரம் அருகில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது. இத்தலம்.நல்லியலார் தொழு நல்லூர் பெருமணம்’ (683-4) என்ற இவர் பாடலடிகள் நல்லூர் ஊர்ப்பெயர் ; பெருமணம் கோயில் என்பதையும் தருகிறது. நல்லூர் என்ற பிற ஊர்களினின்றும் தனித்துச் சுட்ட, கோயிற் பெயரையும் இணைத்துச் சுட்டினார்களோ எனத் தோன்றுகிறது. மேற்குறிப்பிட்ட நல்லூர் போன்ற நிலையில் இவ்வூர்ப் பெயரும் அமைந்திருக்க வாய்ப்புண்டு. எனினும் சேக்கிழார். திருஞானசம்பந்தர் வரலாற்றில் சுட்டும் இதனை,
ஏதமில்சீர் மறையவரின் ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர் திருப்பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெறும்
காதலியைக் காழி நாடுடைய பிரான் கைப்பிடிக்கப்
போதுமலர் பெருந்தன்மை எனப் பொருந்த எண்ணினார் (1161)
எனக்கூறி, பெருமணம் என்ற ஊரினைக் குறிப்பிட்ட பின்னர் சேக்கிழார் மேலும்,
வருவாரும் பெருஞ்சுற்றம் மகிழ் சிறப்ப மகட்பேசத்
தருவார் தண்பணை நல்லூர் சார்கின்றார் தாதையார் (1162)
என, பெருமணத்தை, தண்பணை நல்லூர் எனவும் சுட்டுகின்றார். எனவே இவ்வூர் மூங்கில்கள் நிறைந்த சிறந்த வளமுடைய என்பது தெரிகிறது. நல்லூரில் பெருமணம் என்று சம்பந்தர் பெருமணம் சோயில் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார். ஆயின் ஈண்டு சேக்கிழார் திருப்பெருமணத்து நம்பாண்டார் நம்பி என பெருமணத்தை ஊராகவே சுட்டும் நிலை கோயிற் பெயர் பின்னர் ஊரையும் குறித்து அமைந்த தோ என்ற எண்ணத் தைத் தருகிறது. பின்னர் நல்லூர். பெருமணம் இரண்டும் வழக் கிழக்க. ஆச்சாள் புரம் என்ற பெயர் செல்வாக்குப் பெறுகிறது என்று தோன்றுகிறது. நல்லூர் சிறந்த ஊர் என்ற நிலையில் அமைந்த முதல் பெயர் பின்னர் கோயிற் பெயரையும் இணைத்து சுட்டும் நிலையும் பெருமணம் ஊர்ப்பெயராக அமைந்தது என்பதைக் காட்டும்.