நல்லிசைப்புலவர் செய்யுள்

மாத்திரை முதலாகிய இருபத்தாறு உறுப்புக்களும் குறை யாமல்செய்யப்படுவன நல்லிசைப்புலவர் செய்யுள் என்பது. பாட்டு நூல் உரைமுதலாகிய எழுநிலத்து எழுந்த செய்யு ளுள்ளும் அடி வரையறையுடையபாட்டுக்கே இக்கூறிய இருபத்தாறு உறுப்புமுள என்பதனையும், ஏனைய நூல்உரை முதலிய செய்யுளுக்குத் திணை கைகோள் முதலாகக் கூறும்உறுப்புக்களெல்லாம் உறுப்பாகா என்பதனையும், அவை ஒழிந்த உறுப்பில்ஏற்பன பெறுமாயினும் வரையறையுடை யன அல்ல என்பதனையும், அவை செய்தார்நல்லிசைப் புலவர் எனக் கொள்ளத்தகார் என்பதனையும், இவ்விலக் கணத்தில்பிறழ்ந்தும் குன்றியும் வருவன எல்லாம் வழு என்பதனையும்,‘நல்லிசைப்புலவர் செய்யுள்’ என்ற தொடர் புலப்படுத்துவது. (தொ. பொ. 313பேரா)